24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

சர்வதேச நாணய நிதிய கடனுக்கு வருட இறுதிவரை காத்திருக்க வேண்டும்!

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கு இந்த வருட இறுதி வரை இலங்கை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் மட்டக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கடனுக்கான நிதிச் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.

”நான் ஜப்பானிய தூதுவருடன் கலந்துரையாடிய போது இலங்கை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் கூறினார். சர்வகட்சி அரசாங்கம் அமைந்தால் குறுகிய கால கடன் வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம் அல்லது கடன் ஒப்பந்தத்தில் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் கையொப்பமிட வேண்டும் என்றார்.” என்று அவர் கூறினார்.

”மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத்தை நான் சந்தித்தேன். சில டொலர்களை கொண்டு வர இலங்கை தனக்கு ஒப்பந்தம் வழங்கிள்ளதாக கூறினார். அவர் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் பேசியதாகவும், ஆனால், இலங்கையிடம் நிதி உதவி பெறும் திட்டம் கூட இல்லையென அவர் கூறியதாகவும் குறிப்பிட்டார். பின்னர், அவர் நஷீத்திடம் இலங்கை விற்க விரும்பும் பொருட்களின் பட்டியலை அனுப்பவும், நிதி உதவி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் கோரியுள்ளார். முகமது பின் சல்மானுடன் பேசுவதற்கு இலங்கைக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லை என்பதையே இது காட்டுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment