முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு எதிரில் இன்று காலை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘தம்மிகா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது சூதாட்ட வணிகங்கள் குறித்து பொறுப்புக் கூறுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வெளியில் வருமாறும் அவரை அழைத்தனர்.
போராட்டம் நடந்துகொண்டிருந்ததால் பெரேராவின் வீட்டிற்கு வெளியே கலகத் தடுப்புப் பொலிஸாரும் இராணுவமும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கசினோ சூதாட்ட வர்த்தகரான தம்மிக்க பெரேரா செலுத்த தவறியதாக கூறப்படும் வரிகளை செலுத்தி, நாட்டிற்கான அவரது பங்களிப்பை செய்யுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு குப்பைக் கொள்கலனை இறக்குமதி செய்த சம்பவத்தின் பின்னணியில் அவரே இருந்ததாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.