யாழில் மாற்றுப் பாலினத்தினரின் உரிமைக்காக பேரணி!

Date:

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றது.

சமத்துவம், சுயமரியாதை, மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் பாலின வேறுபாடின்றி போராட்டகாரர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சீனாவின் தோளில் வைத்து சுடும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?

கடந்த மாதம் தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானியை மீட்க ஆபத்தான...

யாழ் மேல் நீதிபதி இடமாற்ற விவகாரம்: யாழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் குழப்பம்… தலைவர் பதவி விலகினார்; ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு...

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்