மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (11) காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்று சனிக்கிழமை (10) காலை கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1