ஒன்றாக அடக்கம் செய்யப்பட்ட காதல் ஜோடி: ஒற்றை மின்விளக்குடன் பயணித்த உழவு இயந்திரத்தினால் நேர்ந்த விபத்து!

Date:

காதல் திருமணம் செய்த இளம் ஜோடி விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டன.

கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் கடந்த 8ஆம் திகதி இரவு நடந்த விபத்தில் இந்த ஜோடி உயிரிழந்தது.

வல்லவ விதானகே ரிசித குமார (24),. களுதுருகே லக்ஷானி (19) ஆகியோரே உயிரிழந்தனர்.

காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களின் முன்னர் அவர்கள் திருமணம் முடித்திருந்தனர். இருவரும் தனித்து வாழ்ந்து வந்த நிலையில், கலஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வாரத்திற்கு ஒருமுறை செல்வது வழக்கம்.

கடந்த 8ஆம் திகதியும் உறவினர் வீட்டிற்கு சென்று, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.

கலஹிட்டிய வீதியில் வந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது. உழவு இயந்திரத்தின் பிரதான மின் விளக்குகளில் ஒன்று செயலிழந்துள்ள நிலையில், ஒற்றை விளக்குடன் உழவு இயந்திரம் பயணித்துள்ளது.

எதிரே வருவது மோட்டார் சைக்கிள் என நினைத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பயணித்ததாலேயே விபத்து நேர்ந்ததாகவும், மின்வெட்டால் வீதி விளக்குகளும் எரியாததால், எதிரே வந்த உழவு இயந்திரத்தை அவர்களால் அடையாளம் காண முடியாமல் போனதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து பயணித்த யுவதி, தூக்கி வீசப்பட்டு, உழவு இயந்திரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞனும் சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

சடலங்கள் கந்த வீதியில் உள்ள இளைஞனின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்