சுதாகரை அடுத்து பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிய உள்ளது.
தமிழில் பிரபல யூடியூப் சேனலாக வலம் வருகிறது பரிதாபங்கள். சுதாகர் மற்றும் கோபி இருவருக்கும் தமிழகம் முழுக்க ரசிகர்கள் ஏராளம். அவ்வப்போது நடக்கும் அரசியல் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை பகடி செய்து அவர்கள் வெளியிடும் விடீயோக்கள் பல லட்சம் மக்களால் ரசித்துப் பார்க்கப்படுகிறது.
சுதாகரும் கோபியும் கல்லூரியிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். யூடியூப்பில் பிரபலமான இவர்கள் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். தற்போது CrowdFunding முறையில் 6 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய திரைப்படத்தையும் உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முந்தினம் பரிதாபங்கள் கோபிக்கு யமுனா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு சில வாரங்களுக்கு முன்னர் சுதாகருக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.




