7 ஆண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த பிரதேச செயலாளருக்கு விளக்கமறியல்!

Date:

வலப்பனை பிரதேசசெயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரமேஷ் அசங்க விக்கிரமரத்தினவை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரதேச செயலகத்தின் சிற்றூழியர்களான ஏழு ஆண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உளளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வலப்பனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகநபர் நேற்று (09) வலப்பனை பிரதேச செயலகத்திற்கு கடமைக்கு வந்த போது, கைது செய்துள்ளனர்.

பின்னர் இவர் வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, எதிர்வரும் (20) ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்