யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று மாதங்களுக்கு முன் திருடப்பட் முச்சக்கரவண்டி, பருத்தி்த்துறை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
திருகோணமலை இருந்து மருத்துவத்திற்காக வந்திருந்த மாற்றுத்திறனாளியின் முச்சக்கரவண்டி திருட்டுப் போன நிலையில் பருத்தித்துறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்து, பருத்தி்த்துறை அம்புலியோடையில் வைத்து குறித்த முச்சக்கரவண்டி கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனுடன் மேலுமொரு முச்சக்கரவண்டியும் இலக்கத் தகடை மாற்றி மோசடி செய்தமை தொடர்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. இலக்கத் தகடை மாற்று மோசடி செய்தமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி கடந்த மே மாதம் 3ம் திகதி களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.