உக்ரைனுக்காகப் போரில் சண்டைபோட்டுப் பிடிபட்ட பிரட்டனைச் சேர்ந்த இருவருக்கும் மொரோக்கோவைச் சேர்ந்த ஒருவருக்கும் ரஷ்ய நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஷான் பின்னரும், மொரோக்கோவைச் சேர்ந்த பிராஹிம் சாடூனும் வன்முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றதை ஒப்புக்கொண்டனர்.
பிரிட்டனின் ஐடன் அஸ்லின் மீது ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதாக ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அரசியல் காரணங்களுக்காகப் போர்க் கைதிகள் பயன்படுத்தப்படுவதற்கு பிரிட்டனின் வெளியுறவு, காமன்வெல்த், வளர்ச்சி அலுவலகம் கண்டனம் தெரிவித்தது.
மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் மரியுபோல் நகரில் சரணடைந்தனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் விசாரணை நடைபெற்று வருகிறது