பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8 மணிக்கு முன்னர் நீதிமன்றில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 9 வன்முறை சம்பவத்தில் சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த பல நாட்களாக இரகசிய இடத்தில் பதுங்கியிருக்கிறார்.
அவரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு ஜோன்ஸ்டன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
2
+1
+1
1
+1
+1
+1
+1