25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி பாடசாலையில் ‘அல்லோலகல்லோலம்’: 11 மாணவர்கள் வைத்தியசாலையில்!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (07) நிறைவுபெறும் நேரத்தில் குளவிக் கொட்டால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகள் தாவியதால் குளவி கூடு
கலைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதையடுத்து மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகியதோடு, சில மாணவிகள் குளவி கொட்டுக்கு உள்ளாகி மயக்கமடைந்தும் காணப்பட்டனர். .இவர்கள் உடனடியாக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் விடுதிகளுக்கு அனுப்பபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் குளவி கூடு கலைந்த போது பாடசாலையின் அபாய சமிஞ்சை ஒலி எழுப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகினர். ஆனாலும் பாடசாலையின் பிரதான வாயில் மட்டுமே திறந்து விடப்டப்டது. ஏனைய இரண்டு வாயில்களும் பூட்டப்பட்டே காணப்பட்டது என்றும் ஆபத்துகளின் போது மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் எந்த பொறிமுறையும் இன்றி பாடசாலை காணப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

தமிழ் அரசு கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் பதில் மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் நிரப்பப்படாத 162 அரச பணியாளர்கள் பதவிகள் – மருதலிங்கம் பிரதீபன்

east tamil

சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

east tamil

Leave a Comment