25.3 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

அமைச்சர்கள் 1 வருடம் சம்பளம் இன்றி பணியாற்ற தீர்மானம்!

அமைச்சர்கள் சம்பளம் இன்றி ஓராண்டு காலம் பணியாற்றுவது என நேற்று (06) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடு எதிர்நோக்கும் கடுமையான நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உர இறக்குமதிக்காக 55 இலட்சம் அமெரிக்க டொலர்களை ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பயிர்ச்செய்கை யுத்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

Leave a Comment