அடுத்த 3 வாரங்களிற்கு எரிபொருள், எரிவாயுவை பெறுவதில் சிரமம் இருக்குமென்பதால் பொதுமக்கள் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தும்படி பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
02 ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் பயிர் செய்யும் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் குறித்து அமைச்சரவை விவாதித்தது. தேவையேற்படுபவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் எனவும் இதன் காரணமாக தம்மை மாத்திரம் சிந்திக்காது நாட்டு மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.