கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு இன்று விசேட உள்நாட்டு எரிவாயு விநியோகத் திட்டத்தை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். பிற்பகலில் சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 159 டீலர்களுக்கு 16,987 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். 12.5 கிலோ எடையுள்ள 14,977 எரிவாயு சிலிண்டர்கள், 5 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் மற்றும் 2.3 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1