29.5 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

ஏரோஃப்ளோட் விமானம் வெளியேற விதிக்கப்பட்ட தடை இடைநிறுத்தப்பட்டது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் புறப்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் இன்று (6) பிற்பகல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 2ஆம் திகதி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியேற தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை இரத்துச் செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது, தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளது மற்றும் சட்டரீதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து, சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம், இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சட்ட தகராறு தொடர்பாக வணிக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஏரோஃப்ளோட் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை  ரஷ்யயாவை கடுமையாக கோபமூட்டியது.

கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான வர்த்தக விமான சேவைகளை நிறுத்துவதாக ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.

இந்த விவகாம், இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சினை என்று வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மூன்று நாட்களாக  இலங்கையை விட்டு வெளியேற முடியாமல் இருந்த ரஷ்ய பிரஜைகள் நேற்று ரஷ்யா திரும்பினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment