கொழும்பு, கோட்டையில் இன்று (4) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்பவர்கள் பல வீதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரத்தா எனப்படும் ரதிது சேனாரத்ன மற்றும் மேலும் ஐவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, NSA சுற்றுவட்டம் முதல் சைத்திய வீதி, NSA சுற்றுவட்டம் முதல் ஜனாதிபதி மாவத்தை, செராமிக் சந்தியில் இருந்து யோர்க் வீதி, லேடன் பஸ்டியன் வீதி, முதலிகே மாவத்தை, வைத்தியசாலை வீதி, வங்கி வீதி, பரோன் ஜயதிலக மாவத்தை, சத்தம் வீதி, மற்றும் கெனால் வீதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. .
குற்றவியல் சட்டத்தின் விதிகளின் கீழ், இந்த வீதிகளுக்குள் நுழைவதையும், வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும், நடைபாதையில் செல்வதையும் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவு நகல்களை காட்சிக்கு வைக்குமாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.