அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு இடையில் மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
19வது திருத்தச் சட்டத்தின் சில விதிகளை அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் வடிவில் மீண்டும் அமுல்படுத்த கட்சித் தலைவர்கள் முன்னைய சுற்று கலந்துரையாடலின் போது தீர்மானித்துள்ளனர்.
இரண்டாவது கட்டமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவுக்கு அரசியல் கட்சிகள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிலையில், குறித்த பிரேரணைகள் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
திருத்தப்பட்ட வரைவு திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை நடந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள தமிழ் தரப்புக்கள் ஆர்வம் காட்டவில்லை. இன்றைய கலந்துரையாடலிற்காவது தமிழ் கட்சிகள் சென்று தமது கருத்துக்களை தெரிவிப்பார்களா என்பது தெரியவில்லை.