உரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தால் ஐந்தாறு மாதங்களுக்குள் தற்போதைய உணவுத் தட்டுப்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தல் காரணமாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரித்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) இலங்கைக்கான பிரதிநிதி விம்லேந்திர ஷரன் மற்றும் UNDP பிரதிப் பிரதிநிதி மலின் ஹெர்விக் ஆகியோருடன் பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
தற்போது விவசாயத் துறை எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை உரங்கள் மற்றும் எரிபொருள் என தெரிவித்த பிரதமர், எதிர்கால உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அவர் தொடங்கியுள்ள நகர்ப்புற விவசாயத் திட்டத்தையும் விவரித்தார்.