யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் கடந்த 48 மணித்தியாலத்தில் 2 யுவதிகள் காணாமல் போனதாக முறையிடப்பட்டுள்ளது.
பொலிசாரின் விசாரணையில், ஒருவர் காதலனுடன் சென்றது தெரிய வந்தது.
20 வயதான அந்த யுவதியை காணவில்லையென நேற்று முன்தினம் முறைப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, நேற்று தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற வேலணை, சரவணையை சேர்ந்த 15 வயதான சிறுமியை காணவில்லையென முறையிடப்பட்டுள்ளத.
பொலிசார் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1