காலி முகத்திடல், அலரி மாளிகையின் முன்பாக அமைதியாக போராடிய பொதுமக்கள் மீது பொதுஜன பெரமுன குண்டர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (3) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு அல்லது இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடையவுள்ளதாக தகவல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மேலும் 4 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டனர்.
இவர்களில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மற்றும் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்னும் சரணடையவில்லை.
அவர் சரணடைய இன்று காலை வரை அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை அவர் சரணடையாவிட்டால் அவரது இருப்பிடத்தை அறிந்து, அவரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.