24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
குற்றம்

4 வயது சிறுமியை இரும்புக்கம்பியினால் தாக்கிய தந்தை!

தந்தை இரும்பும் கம்பியினால் தாக்கியதால் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (31) இரவு இடம்பெற்றது.

கொடிகாமம், கெற்பெலி பகுதியை சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டார்.

இரட்டை குழந்தைகளில் ஒருவரான சிறுமி வீட்டுக்கு வெளியில் சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த தந்தை, யாருக்கும் சொல்லாமல் ஏன் வீட்டுக்கு வெளியில் சென்றாய் என கேட்டு, இரும்புக் கம்பியினால் சிறுமியை தாக்கியுள்ளார்.

இதில் சிறுமியின் கை, காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அன்று இரவே சிறுமி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தந்தையை கைது செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment