தற்போது 92-ஒக்டேன் பெற்றோலில் கிட்டத்தட்ட 33,500 மெட்ரிக் தொன்கள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 08.30 மணி நிலவரப்படி பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியதாவது-
13,067 மெட்ரிக் தொன் 95-ஒக்டேன் பெற்றோலும், 18,825 மெட்ரிக் தொன் ஆட்டோ டீசல், 42 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் மற்றும் 386 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருள் இருப்பில் உள்ளது.
தற்போது டீசல் இறக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளும் தொடர்கின்றன. சுத்திகரிப்பு நிலையம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இயக்காமல் இருந்து, இந்த வார தொடக்கத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1