Pagetamil
இலங்கை

தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் தந்தையும் மகளும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, ஹீனடியங்கல, கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது மகள் சமரசிங்க சச்சித்ரா ஹன்சமலி ஜயசிங்க (33) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீட்டில் பெற்றோரும் மகளும் தங்கியிருந்ததுடன், தந்தை நாற்காலியில் அமர்ந்த நிலையிலும், மகள் அறையில் தரையிலும் சடலமாக கிடப்பதாகவும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!