26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

சஷி வீரவன்சவின் பிணை மனு நாளை வரை ஒத்திவைப்பு!

போலி கடவுச்சீட்டு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படும் என குறிப்பிட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சசி வீரவன்சவுக்கு வெள்ளிக்கிழமை (27) இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் ரூ.100,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிவான் அறிவித்தார்.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததன் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி சஷி வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

சஷி வீரவன்ச 1967ஆம் ஆண்டு பிறந்ததாகவும், போலி கடவுச்சீட்டில் அவர் பிறந்த ஆண்டு 1971 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், சஷி வீரவங்சவிடம் இரண்டு பிறந்த நாளைக் கொண்ட இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

சாவகச்சேரியில் ஜேவிபி எம்.பி பிடித்த பாரவூர்தி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை!

Pagetamil

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு பின்னணி வெளியானது!

Pagetamil

விளையாட்டு வினையாது: வெளிநாட்டிலுள்ள கணவனை பயமுறுத்த இளம் பெண் ஆடிய நாடகத்தால் நேர்ந்த சோகம்!

Pagetamil

பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு

east tamil

Leave a Comment