26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
உலகம்

லழிதவறிய திமிங்கிலத்தை கருணைக்கொலை செய்ய தீர்மானம்!

பிரான்சின் சீன் ஆற்றில் வழிதவறி வந்த ஓர்க்கா வகைத் திமிங்கிலத்தைக் கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்த பின்னர் கருணைக்கொலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரணம், அந்த திமிங்கிலம் வலியின் வேதனையிலும் தீராத நோயாலும் அவதிப்படுவதாக விஞ்ஞானிகள் கூறினர்.

4-மீட்டர் (13 அடி) ஓர்கா ஆண் திமிங்கிலம் கடந்த மே 16 அன்று லு ஹவ்ரே துறைமுகத்திற்கும் நோர்மண்டியில் உள்ள ஹோன்ஃப்ளூர் நகரத்திற்கும் இடையில் பயணித்த போது,  முதன்முதலில் சீன் ஆற்றின் முகப்பில் காணப்பட்டது.

சனிக்கிழமையன்று திமிங்கலத்தை கடக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, ட்ரோன் மூலம் ஒர்கா திமிங்கில ஒலிகளை வெளியிட்டு, கடலுக்கு வழிகாட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் திமிங்கலம் ஒலி தூண்டுதலுக்கு “தவறான முறையில்” மற்றும் “ஒழுங்கற்ற முறையில்” பதிலளித்தது. திமிங்கலம் வெளியிட்ட ஒலிகள், அது வேதனையிலும், நோய் நிலைமையிலும் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

விஞ்ஞானிகள் நடத்தை, படம், தரவையும் மதிப்பாய்வு செய்து, அந்த விலங்கு வட அமெரிக்காவில் உள்ள திமிங்கலங்களில் காணப்படும் மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்று முடிவு செய்தனர். ஆனால் ஐரோப்பாவில் இன்னும் இந்த நோய்ப்பாதிப்பு கண்டறியப்படவில்லை.

பலவீனமான விலங்குகளின் தோலைப் பாதித்த பிறகு, இந்த நோய் இதயம், நுரையீரல் மற்றும் மூளைக்கு பரவக்கூடும். இது திமிங்கலத்தின் திசைதிருப்பப்பட்ட நடத்தையை விளக்குகிறது.

அந்த திமிங்கிலத்திற்கு நோய்ப்பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது மற்றும் திமிங்கலத்திற்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று  கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளில், வல்லுநர் குழு மூடி, திமிங்கின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு கருணைக்கொலை செய்வதே ஒரே சாத்தியமான தீர்வு என கண்டறிந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

east tamil

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

Pagetamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

Leave a Comment