27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இந்திய நிதியமைச்சர்- தூதர் மொரகொட சந்திப்பு!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன் வடிவில் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்காகவும், இந்த சவாலான காலங்களில் வழங்கப்பட்ட பலன்ஸ் பேமெண்ட் ஆதரவுக்காகவும் இந்திய நிதி அமைச்சருக்கு, உயர் ஸ்தானிகர் மொரகொட நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரையில் இந்த உதவியானது இலங்கைக்குத் தேவையான பிரிட்ஜிங் நிதியின் ஒரு பகுதியாக அமையும் என அமைச்சரும் உயர்ஸ்தானிகரும் அவதானித்துள்ளனர். அந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை பிரிட்ஜிங் நிதியைப் பெறுவதற்காக இலங்கைக்கு ஆதரவளித்த முதல் நாடு இந்தியா என்பதும் அவதானிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் அமைச்சர் சீதாராமன் ஆகியோர், இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகள் மூலம், பிரிட்ஜிங் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்காக, சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு, இலங்கைக்கு எவ்வாறு இந்தியா உதவுவது என்பது குறித்து விவாதித்தனர்.

உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கடன் நிறுத்தம் குறித்து அமைச்சரிடம் விளக்கினார். கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை அதிகாரிகள் ஒருமித்த உடன்பாட்டைக் கோருவதாக அவர் அவரிடம் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன்கள் மற்றும் பேமெண்ட் பேலன்ஸ் ஆதரவு போன்ற வடிவங்களில் ஏற்கனவே இந்தியா வழங்கிய சில உதவிகளை மேம்படுத்தி மறுகட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

இலங்கையின் வேகமான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை நடுத்தர காலத்தில் மேம்படுத்துவதில் இந்தியா எவ்வாறு விரிவாக்கப்பட்ட பாத்திரத்தை வகிக்க முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

உயர் ஸ்தானிகர் மொரகொட மற்றும் அமைச்சர் சீதாராமன் ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒத்துழைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கும் நடந்து வரும் உத்தியோகபூர்வ மட்ட கலந்துரையாடல்களை மீளாய்வு செய்து திருப்தியை வெளிப்படுத்தினர்.

பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழு, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர், அதேவேளையில் இந்தியாவின் பிரதான பொருளாதார ஆலோசகர் மற்றும் செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இரு நாடுகளின் தலைநகரங்களில் உள்ள உயர் ஸ்தானிகராலயங்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றன.

இந்த சந்திப்பின் போது, ​​பொருளாதார நெருக்கடியின் மனிதாபிமான செலவுகள் குறித்து இந்திய நிதியமைச்சர் கவலை தெரிவித்ததுடன், இலங்கையின் சவால்களை சமாளிக்க இந்தியா துணை நிற்கும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த உயர் ஸ்தானிகர் மொரகொட, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் அவர் எடுத்துள்ள தனிப்பட்ட ஆர்வத்திற்கு அமைச்சர் சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment