தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அவரைச் சந்தித்துப் பேசி இவ்விடயம் தொடர்பில் அவரது கருத்துக்களைப் பெற வேண்டும் எனவும் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரஞ்சனை விடுவிக்கக் கோருகின்றனர். கட்சிகளின் கோரிக்கையை விட, ரஞ்சனை பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர்களின் குரலைக் கேட்பதன் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு ரஞ்சனை விடுவிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1