21வது திருத்த சட்ட வரைவு பற்றி கட்சிகளுடன் இன்று கலந்துரையாடல்!

Date:

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (27) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் போது கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனைத்து கருத்துக்களும் ஆலோசனைகளும் மீண்டும் ஒருமுறை அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துதல், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றப் பதவிகளை வகிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் 21வது திருத்தச் சட்டத்தின் வரைவில் உள்ளன.

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு மீதான இன்றைய கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் உச்ச நீதிமன்றத்தில் யாரேனும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

அதன் பின்னர் இந்த வரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட வரைவின் நகல் கட்சிக்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வரைவை ஆய்வு செய்ய சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட 21வது திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை கட்சி இன்று அறிவிக்கவுள்ளது.

21வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் பிரதமருடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் 10 சுயாதீன அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து கொள்ளவுள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, திருத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், 21வது திருத்தச் சட்டத்தின் சாதகமான விடயங்களுக்கு பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.

தமது முன்மொழிவுகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டால் 21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.

இதேவேளை, 21ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கட்சித் தலைவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

21வது திருத்தச் சட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக 10 சுயாதீன அரசியல் கட்சிகள் அடங்கிய குழு இன்றைய கலந்துரையாடலில் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான தனது நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி இன்று அறிவிக்கவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இது தொடர்பில் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் முக்கிய கூறுகள் மீளமைக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி நம்புகிறது என்றார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஒத்துழைக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

வரைவை வகுத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை தற்போது ஆராய்ந்து வருவதாகவும், கட்சியின் கருத்தின் அடிப்படையில் நாட்டுக்கு பொருத்தமானதாக இருந்தால் அந்த முன்மொழிவுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை அனுமதியின்றி கடக்க முற்படும் கப்பல்கள் தகர்க்கப்படும்: ஈரான்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக்...

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்