யாழில் மதுபான விடுதியில் ஆங்கிலம் பேசியதால் கொலை: சட்டத்தரணிகள் சிறிகாந்தா, சர்மினி ஊடாக சந்தேகநபர்கள் சரண்!

Date:

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர் ஏற்கனவே நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 24 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர், சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் சரண்டைந்துள்ளார்.

கடந்த மே 2ஆம் திகதி இரவு விடுதியில் மதுபானம் அருந்திய இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் போத்தலினால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த ஒருவரும், அவரது ஒன்றுவிட்ட சகோதரரும், நண்பர்களும் அங்கு மதுபானம் வாங்க சென்றிருந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்தவர் ஆங்கிலத்தில் பேசியதாக குறிப்பிட்டு, அங்கிருந்தவர்கள் தகராற்றில் ஈடுபட்டனர்.

இதில், வெளிநாட்டிலிருந்து வந்தவரின் ஒன்றுவிட்ட தம்பி மதுபான போத்தலால் குத்திக் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி ( 25) என்பவரே கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தையடுத்து போத்தலினால் குத்தியவர் உள்ளிட்ட நால்வர் தலைமறைவாகிய நிலையில் நெல்லியடிப் பொலிஸார் தேடி வந்தனர்.

அவர்களில் அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

குடத்தனை மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார்.

சில நாட்களின் பின்னர் மற்றொரு சந்தேகநபர் சட்டத்தரணி சர்மினி ஊடாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.

சந்தேக நபர்கள் மூவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதன்மை சந்தேக நபர் 24 நாள்களின் பின்னர், தனது சட்டத்தரணி  என்.சிறிகாந்தா ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்துள்ளார்.

வரணி, இயற்றாழை பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சரணடைந்தார்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணையின் போது, மூன்றாவது சந்தேகநபரை பொலிஸ் விளக்கமறியலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தை நெல்லியடி பொலிசார் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், சந்தேகநபரின் சட்டத்தரணி சர்மினி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண சிறைச்சாலையில் வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை அனுமதியின்றி கடக்க முற்படும் கப்பல்கள் தகர்க்கப்படும்: ஈரான்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக்...

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்