அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள ரெப் ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
2 நாள்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் இர்மா கார்சியா (Irma Garcia).
துப்பாக்கிச்சூட்டில் அவர் கொல்லப்பட்ட இரண்டாவது நாளிலேயே அவரது கணவர் ஜோ கார்சியா (43) மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பதற்கு ஒரு சில மணித்தியாலங்கள் முன்னதாகவே, தனது மனைவியின் நினைவிடத்திற்கு சென்று சிவப்பு ரோஜாக்கள் வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தார். வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்தார்.
மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள்.
ரொப் ஆரம்பப் பாடசாலையின் இணையப்பக்கத்தில் ஆசிரியை இர்மா கார்சியாவைப் பற்றிய தகவல் குறிப்புஒன்று இருந்தது.
‘எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்: என் கணவர், நான்கு பிள்ளைகள்; பிடித்தமானது: மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பது’ என தன்னைப் பற்றி இர்மா கார்சியா குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் இர்மாவும் அவரது கணவரும் உயர்நிலைப் பாடசாலைப் பருவத்தில் அவர்களது உறவைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
இந்த ஜோடி திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றன; ஜோ ஒரு ஆசிரியராகவும், இர்மா இப்போது பிரபலமாகியுள்ள ராப் ஆரம்பப் பாடசாலையில் நான்காம் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார்.