‘மனைவியிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்’: கணவரின் கோரிக்கையை ஏற்று பொலிஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Date:

மனைவியின் கொடூர தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கோரி, கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவருக்கு மனைவியிடமிருந்து பாதுகாப்பு வழங்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலை அதிபரான அவரை மனைவி கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் குடும்ப வன்முறை சிசிரிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மனைவி கிரிக்கெட் மட்டை, கொட்டான், தும்புத்தடி என கையில் கிடைப்பவற்றினால் எல்லாம் அடித்து, தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பலவீனமாக்கி விட்டதாக குறிப்பிட்டு, மனைவியிடமிருந்து பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அந்த நபரின் கூற்றுப்படி, அவரது மனைவி அவரை கருப்பு மற்றும் நீல நிறத்தில் அடித்து மனரீதியாக பலவீனப்படுத்தியுள்ளார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரான அஜித் சிங், அரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் சுமன் என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் நிம்மதியாக இருந்த அவர்களது வாழ்க்கையில், சிறிது காலம் கழித்து வன்முறை தொடங்கியது. மனைவி சுமன் அடிக்கடி சன்னதம் கொண்டு நடத்தும் கொலைவெறித் தாக்குதல்களால், அதிபர் அஜித் சிங் பலமுறை காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவ உதவியை நாடியுள்ளார்.

தொடர் தாக்குதல்களை தாங்க முடியாத அதிபர், ஆதாரங்களை சேகரிக்க வீட்டில் சிசிடிவி கமராக்களை பொருத்தினார். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில், அந்த பெண், அவர்களின் மகன் பார்த்தபடியே அதிபரை கிரிக்கெட் மட்டையால் அடிப்பதைக் காணலாம்.

அஜித் சிங் இதுவரை அமைதியாக இருந்ததாகவும், ஆசிரியர் பணியின் கண்ணியத்தை மனதில் கொண்டு வன்முறையை சகித்துக் கொண்டதாகவும் கூறுகிறார். ஆனால் இப்போது மனைவி எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டதால் நான் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன் என தெரிவித்தார்.

தனது மைத்துனர் தனது மனைவியை வன்முறைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அணுகிய அவர், சம்பவத்தின் காட்சிகளை சமர்பித்துள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘நான் சுமனை ஒரு நாளும் அடித்ததில்லை. சட்டத்தை கையில் எடுத்ததுமில்லை. நான் ஒரு ஆசிரியர். ஒரு பெண் மீது ஆசிரியர் கையை உயர்த்தி சட்டத்தை கையில் எடுத்தால் அது இந்திய கலாச்சாரத்திற்கும் எனது நிலைப்பாட்டிற்கும் எதிரானது’ என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்