கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (25) மூன்று மணிநேர வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.
கொழும்பில் உள்ள விசேட இடத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் பொதுஜன பெரமுன குண்டர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதல் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. நாடு முழுவதும் ஒன்று திரண்டு, பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். வன்முறைகளில் சுமார் 10 வரையானவர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவம் பற்றி குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு அங்கமாக மஹிந்த ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.