25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

ஓரு வேளை உணவில்லாத மக்களும் உள்ளனர்: நடுத்தர வர்க்கம் இல்லாமல் போவதாக உணர்கிறார்கள்: பிரதமர் ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான கடனுதவிக்கான ஏற்பாட்டை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பூர்த்தி செய்ய முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் ஊடகத்துடனான நேர்காணலில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

IMF உடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தவும், ஜூன் நடுப்பகுதிக்குள் கடனைப் பெறுவதற்கும் உடன்படுவதாகவும், அதனால் அவசரமாகத் தேவைப்படும் நிதிக்காக மற்ற கடன் வழங்குநர்களை அணுகலாம் என்றும் கூறினார்.

அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டச் செலவினங்களை “வெறும் எலும்புகளாக” குறைக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% என்ற முதன்மை உபரியை முறியடிக்கும் என்றும் நம்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் முழு டொலர் தேவையையும் வழங்காவிட்டாலும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் உறவை ஆரம்பிக்கும் பட்சத்தில் ஏனையவர்கள் உதவுவது இலகுவாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பலதரப்பு கடனளிப்பவர்களிடமிருந்தும் கடன் வழங்குபவர்களிடமிருந்தும் உணவு மற்றும் எரிபொருளுக்குச் செலுத்த உதவுவதற்காக அரசாங்கம் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 4 பில்லியன் டொலர்களை கோருகிறது.

தற்போது பல இன்னல்களை எதிர்நோக்கும் மக்களுக்கு ஆதரவளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

“மக்களின் கோபத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களில் சிலர் ஒரு வேளை உணவையும் காணவில்லை. நடுத்தர வர்க்கத்தை அடைந்த பலர், அதிலிருந்து வெளியேற்றப்படுவதாக உணர்கிறார்கள். மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இரண்டு பருவங்களாக உரம் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நெருக்கடியைத் தீர்க்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், சீனாவிடம் கடன் மறுசீரமைப்பைப் பெற முயற்சிக்கிறோம்” என பிரதமர் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

“நாங்கள் கடன் வலையில் இல்லை. சீன வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதைத் தவிர, ஜப்பான் மற்றும் சீனாவின் கடன்களின் சதவீதம் ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்”. என்றார்.

பொருளாதார மறுமலர்ச்சிக்கு மேலதிகமாக, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் பரந்த ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

பாரவூர்தி தட்டுப்பாடு – துறைமுகத்தில் நெருக்கடி

east tamil

கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment