ஜெனரல் சவேந்திர சில்வா மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
இதையடுத்து, ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்கவுள்ளார்.
ஜெனரல் சவேந்திர சில்வா, புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, தற்போது, இதுவரை, இராணுவப் படைகளின் பிரதானியாக கடமையாற்றி வருகிறார்.
மே9 கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பின் பல பிரதானிகள் மீது பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து, ஜனாதிபதியிடம் முறையிட்டதாகவும், ஜனாதிபதி பாதுகாப்பு கட்டமைப்பில் மாற்றஙகளை செய்ய உத்தேசித்துள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1