இன்று காலை முதல் தனியார் பஸ்கள் சேவையை நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
டீசல் லீற்றர் ஒன்றிற்கு 111 ரூபா அதிகரிக்கப்பட்டதன் மூலம் ஒரு பஸ்ஸொன்றுக்கு நாளொன்றுக்கு 11,000 ரூபா நட்டம் ஏற்படும் எனவும் எரிபொருள் மானியம் வழங்கப்படாவிட்டால் பஸ் கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் எனவும் பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூ.27ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்த வேண்டும் என்றார்.
எரிபொருள் மானியம் வழங்கினால் நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1