24.8 C
Jaffna
January 18, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் திருகோணமலையில் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலை சல்லிசம்பல்தீவில் வைத்து இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் 30 – 40 வயதுடைய 12 ஆண் சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருகோணமலை கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகைக் கண்டுபிடிப்பதற்காக கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடலில் தரித்து நின்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று  கைப்பற்றப்பட்டதுடன், அதிலிருந்த 55 பேர் கைதாகினர். இவர்களில் 5 கடத்தல்காரர்களும் உள்ளடங்குவர்.

படகு பயணத்தை மேற்கொள்ளவிருந்தவர்கள் 3 வயது முதல் 53 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பெண்களும் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பலநாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று, இவர்கள் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் மற்றும் ஹைஏஸ் வாகனம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிலாவெளி மற்றும் உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஊடக சந்திப்பு

east tamil

பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

மட்டக்களப்பு வாவியிலிருந்து இனந்தெரியாத சடலம் மீட்பு

east tamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

கலைமாறன் செ. லோகாராசா அவர்களுக்கு விருது

east tamil

Leave a Comment