25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இந்தியா

கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலி என்கவுண்டர் செய்யப்பட்டனர்: விசாரணைக்குழு அறிக்கை!

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி என்கவுன்டர் செய்ப்பட்டுள்ளனர் என நீதிபதி சிர்புர்கர் கமிஷன் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீஸார் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய பத்து போலீஸ் அதிகாரிகள் கொலைக்குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று அவர்களின் அறிக்கை பரிந்துரைத்தது.

ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி (28), கடந்த 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ம் தேதி இரவு 4 பேர் கொண்ட கும்பலால் ஒரு லாரியில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

பின்னர், அந்த கும்பல், பிரியங்கா ரெட்டியை ஒரு மேம்பாலத்தின் கீழே பெட்ரோல் ஊற்றி கொடூரமாக உயிரோடு எரித்துக் கொன்றது. இதனை தொடர்ந்து 4 பேரையும் ஹைதராபாத் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

இவர்களை விசாரணைக்காக கடந்த 2019 டிசம்பர் 6ஆம் தேதி அழைத்து சென்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டதால், 3 பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் ஹைதராபாத் சென்று, செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் 4 உடல்களுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.

ஹைதராபாத் வந்த கமிஷன்

இந்நிலையில், உச்ச நீதிமன்ற விசாரணை கமிஷன், ஹைதராபாத் வந்து, உயர் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கியது. தெலங்கானா அரசு அமைத்த ‘சிட்’ கமிஷன் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்ற கமிஷன் துல்லியமாக விசாரித்தது. இதில், 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆராய்ந்தது. மேலும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளையும் விசாரித்தது.

இந்நிலையில், இது போலி என்கவுன்ட்டர் என்றும், இதில் கொலை செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சரிவர விசாரணை ஏதும் நடத்தப்படாமலேயே 4 பேரையும் போலீஸார் சுட்டுக் கொலை செய்துவிட்டு, இது என்கவுன்ட்டர் என நாடகம் நடத்தினர் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிர்புர்கர் கமிஷன் நேரில் சென்று விசாரணை நடத்திய ஆய்வறிக்கை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், போலீஸார் வேண்டுமென்றே திட்டம் போட்டு கொலை செய்தனர் என்றும், இந்த போலி என்கவுன்ட்டரில் 10 போலீஸார் இடம் பெற்றனர் என்றும், இது போல் நடந்தால் மக்களுக்கு நீதிமன்றம், சட்டம் ஆகியவை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் எனவும், சட்டத்தை யாரும் கையில் எடுக்க உரிமை இல்லை எனவும் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற உச்சநீதி மன்றம், இவ்வழக்கையும், இந்த அறிக்கையையும் தெலங்கானா உயர் நீதி மன்றத்திற்கே அனுப்பி வைக்கிறோம். அவர்கள் இதனை வைத்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கட்டும் என கூறியது. ஆதலால், இந்த என்கவுன்ட்டரில் பங்கேற்ற 10 போலீஸாரும் விரைவில் கைது ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

Leave a Comment