கோட்டா கோம் நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர்.
கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
4 நாட்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்து சென்றடைய உள்ளதாகவும் தெரிவிக்கும் அவருக்கு மக்கள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1