முல்லைத்தீவு மாவட்டத்தின் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய நேரத்துக்கு சேவைகளை வழங்க எரிபொருள் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து குறித்த பணி பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில் உரிய போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு சாலையில் பேருந்துகளுக்கு எரிபொருள் சரிவர கிடைப்பதில்லை என்றும் உரிய சேவைகளை வழங்க முடியுமா என்ற நிலையில் உள்ளதாகவும் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1