கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியை இராணுவமுகாம் விஸ்தரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சி இன்றையதினம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருக்கின்ற தனியார் காணி இராணுவமுகாம் விஸ்தரிப்பதற்காக இன்றைய தினம் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் பிரதேச செயலக அதிகாரிகளோடு துயிலும் இல்லத்திற்கு வந்திருந்தனர்.
இதை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செய்ய செ.மயூரன், சாவகச்சேரி நகர சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் நில அளவை நடவடிக்கையை தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து நிலஅளவைத் அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1