25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
உலகம்

ருவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்: எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு

ருவிட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ருவிட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குகிறார். ருவிட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.

ருவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதோடு ருவிட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதாவது ருவிட்டரில் ஒருவர் தவறாக கருத்து தெரிவித்து இருந்தால் அதனை திருத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் அவர் ருவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.

ருவிட்டர் மற்றும் மஸ்க் தரப்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடக்கத்தில் நிறுவனத்தை விற்க ருவிட்டர் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் விரும்பவில்லை. ருவிட்டர் நிர்வாகக் குழு உடனான நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ருவிட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளாவது:

‘‘44 பில்லியன் டொலர் மதிப்புள்ள மைக்ரோ பிளாக்கிங் தளமான ருவிட்டருடனான எனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் உண்மையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் அதனை உறுதி செய்யும் விவரங்கள் நிலுவையில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூடானில் 54 பேர் பலி

east tamil

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

east tamil

டிக்டொக்கால் இறந்த மகள்

east tamil

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

east tamil

‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா… என்னை அழைப்பீர்!’ – அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்

Pagetamil

Leave a Comment