25.6 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

மைத்திரியின் அரசியல் சதிக்கு ஒப்பானது கோட்டாவின் பின் கதவு பிரதமர்: அநுர சாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமை, 2018 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை பின்கதவால் பிரதமராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் சதிக்கு ஒப்பானது என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும், மத்திய வங்கிப் பிணை முறி மோசடி தொடர்பாகவும் தண்டிப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து, விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தது, இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரானது என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இந்த நியமனம் 2018 இல் சதி அரசாங்கத்தை அமைப்பதில் இருந்து எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடியும்? மைத்திரிபால தனது போட்டியாளரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். ஆணைக்கு மாறாக இன்று கோட்டாபயவும் அதையே செய்துள்ளார். அவர்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் அபிலாஷைகளுடன் விளையாடுகிறார்கள்,” என்று அவர் கூறினார். 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியுடன் சேர்ந்து அடித்த ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை

Pagetamil

முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் காணியில் மீட்கப்பட்டவை புலிகளின் ஆயுதங்களா?

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

யாழில் தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!