மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை(12) காலை 10.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நடவடிக்கை இடம் பெற்றது.
-அதனைத்தொடர்ந்து பள்ளிமுனை பங்குத்தந்தையின் மத பிரார்த்தனை யை தொடர்ந்து அங்கு கூடி நின்றவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க உறுப்பினர்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.