தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவைப் பெறும் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அமைதிப் போராட்டத்திற்கு நிபந்தனையின்றி துணை நிற்பதாகவும், போராட்டக் காரர்களுடன் கலந்தாலோசிக்காமல் ராஜபக்ஷ நெருக்கடியை தீர்ப்பதில் பங்காளியாக இருக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பற்றி பரவும் வதந்திகளை மறுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1