இன்று (12) காலை 7 மணியளவில் அனைத்து பொதுச் சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை பதவி விலகக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல தொழிற்சங்கங்கள் நேற்று மாலை வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றன.
மக்களால் கோரப்படும் உண்மையான அரசியல் மாற்றத்துக்கான போராட்டத்தை நாளை முதல் புதிய தோற்றத்துடன் மீண்டும் முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. ஏனெனில், நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும்.
எவ்வாறாயினும், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், சேவைகளைப் பெற அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்னர் முன் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.