இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர்; 19வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் மீள அமுலாகும்: ஜனாதிபதி

Date:

இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். விரைவில் 19வது திருத்தத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சமூக, பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால்,
அரசியல் ஸ்திரமின்மை உருவாக்கப்பட்டது.

கடந்த அமைச்சரவை நியமனத்தின் போது பெருமளவான சிரேஷ்ட அமைச்சர்கள் பிரசன்னமாகியிருந்தனர். மேலும், புதிய அமைசசரவை அனைத்து ராஜபக்சக்களும் அல்லாத இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். அந்த அமைச்சரவை
ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பிரதமர் ராஜினாமா செய்து ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடம் கொடுப்பது என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

மே 09  திங்கட்கிழமை நடந்த சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில்
வன்முறை சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முப்படைகளும் குவிக்கப்பட்டன நாங்கள் அதைச் செய்வதற்கு முன், இந்த வன்முறை  நாடு முழுவதும் பரவியது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட சுமார் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் பல
ஏராளமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. நாடு முழுவதும் கொள்ளை தொடங்கியது.

இந்த சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்து பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
நான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த நிலையில், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு. எனவே, கலவரக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம். இந்த சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு,
அதை ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.

எனவே, இவ்வாறான நாசகார நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்ட, மக்களின் நம்பிக்கையை பெற்ற பிரதமரையும், அமைச்சரவையையும்  நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பின்னர் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்து 19வது திருத்தத்தின்  உள்ளடக்கங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும்படி பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கம் நாட்டை ஸ்திரப்படுத்திய பின்னர் அனைவருடனும் கலந்துரையாடி அதனை நோக்கிச் செயற்பட வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்