26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
கிழக்கு

பெரிய நீலாவணை கடலில் 2 மாணவர்கள் மாயம்!

3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர் காணாமல் போயுள்ளனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் .

வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில் இவ்வாறு கடலில் இழுத்துச் சென்றுள்ளது.இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரை தேடும் பணியில் கடற்படையினர் கடற்தொழிலாளர்கள் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

தற்போது மீட்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது.

சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8வது நபரின் சடலமும் மீட்பு!

Pagetamil

உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Pagetamil

கஞ்சிகுடிச்சாறில் மாவீரர் நினைவேந்தல்

Pagetamil

UPDATE: காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

Pagetamil

காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment