இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி மே 23 ஆம் திகதி வரை தொடரும் என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி தெரிவித்தார்.
“நாங்கள் இலங்கையின் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம், மேலும் அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளோம்” என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மசாஹிரோ நோசாகி கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1