25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவு கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 சகோதரர்கள் மாயம்!

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுஒன்றுசெம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றும் நோக்கோடு ஏனைய இரு சகோதர்களும் முயற்சியில் ஈடுபட்டுள்ளபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

யாழ்வீதி அலம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் செம்மலை கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment