மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் நேற்று (9) கொழும்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தொடர்பான பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த கலவரத்திற்காக அழைத்து வரப்பட்டவர்களிற்கு தாராளமாக மதுபானம் விநியோகிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட பலர், சமுர்த்தி உதவி உள்ளிட்ட உதவிகளை நிறுத்தப் போவதாக மிரட்டி கலவரத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
அரசுக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடந்து வரும் மைனா கோ கம, கோட்டா கோ கம பகுதிகளிற்குள் நேற்று நுழைந்த கலவரக்காரர்கள் கொரூர தாக்குதலை நடத்தினர். எனினும், பின்னர் பொதுமக்கள் திரண்டு கலவரக்காரர்களை விரட்டி விரட்டி அடித்தனர். பல இடங்களில் கலவரக்காரர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட ஒரு குழுவினர், வட்டரக்க திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து தாம் அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர் ரத்நாயக்க என்பவரால் தாம் அழைத்து வரப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.